"மயக்கத்தில் இருந்தாலும் வலியை உணர்ந்தேன்..." வென்டிலேட்டரில் கூட்டு பலாத்காரம்.!! ஊழியர்கள் கைது.!!

ஹரியானா மாநிலம் குருகிராம் மருத்துவமனையில் ஐசியு வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான பணிப்பெண்
குருகிராம் நகரைச் சேர்ந்த 46 வயது பெண்மணி விமான பணி பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தீவிர உடல் நல பாதிப்பிற்குள்ளான அவர் சிகிச்சைக்காக குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட நோயின் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்
இந்நிலையில் வீடு திரும்பிய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஊழியர்கள் சிலர் தன்னைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது கணவரிடம் தெரிவித்திருக்கிறார். மேலும் வென்டிலேட்டரில் மயக்க நிலையில் இருந்தாலும் தன்னால் அந்த வலியை உணர முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி தனது கணவருடன் ஏப்ரல் 13-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தனிமையில் உல்லாசம்... யூடியூபருடன் கள்ளக்காதல்.!! கணவனை கொலை செய்த சோசியல் மீடியா பிரபலம்.!!
காவல்துறை விசாரணை
அவர்களது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிரமான விசாரணையில் இறங்கி இருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் சிலரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அட கொடுமையே... நிச்சயித்த பெண் கூட்டு பலாத்காரம்.!! மாப்பிள்ளை கண் முன் நடந்த கொடூரம்.!!