
2 வயது ஆண் குழந்தையை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில் குடியிருப்பில் ஒரு தம்பதி தங்கள் 2 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர். அவர்களுடன் வீட்டில் உதவிக்காக 16 வயது சிறுவனை வேலைக்கு வைத்திருந்தனர். அவன் அதே வீட்டில் தங்கிவந்துள்ளான்.
இந்தநிலையில், கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவில் குழந்தை அழும் சத்தம்கேட்டுள்ளது. குழந்தை அழுவதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்கள் அறையிலிருந்து குழந்தையின் அறைக்கு வந்து பார்த்துள்ளனர். ஆனால் அந்த அறைக்குள் இருந்த சிறுவன் உள்பக்கமாக தாழ்பாள் போட்டுள்ளான்.
குழந்தையின் தந்தை கதவை திறக்கும்படி மிரட்டிய பிறகு கதவை திறந்துள்ளான். அப்போது, பெற்றோர்கள் குழந்தையின் அருகே சென்றபோது இரண்டு வயது குழந்தையின் உடம்பில் அந்தரங்கப் பகுதிகளிலிருந்து இரத்தம் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த கொடூரச்செயலை செய்த சிறுவன் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டான். இதனையடுத்து பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவப்பரிசோதனையில் 2 வயது குழந்தை என்றும் பாராமல் அந்த இளைஞன் தகாத முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த சிறுவன் செல் போனில் தவறான படங்களைப் பார்த்துவிட்டு இப்படி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான். இதனையடுத்து அந்த சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
Advertisement
Advertisement