நண்பர்களாக பழகி 182 பெண்களின் அந்தரங்க வீடியோ! விசாரணையில் வெளிவந்த தொழிலதிபர்களின் லீலைகள்!



two business man arrest for abused womens

மேற்கு வங்காளத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், பிரபல தொழிலதிபர் அனீஷ் லோஹரூகா மற்றும் ஆதித்ய அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 7 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்புடைய வீடியோக்களை பதிவு செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுடன் நட்பாக பழகும் பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு உறவை வளர்த்து கொண்டு பிறகு அவற்றை  பதிவு செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்களுடன் உறவை முறித்துக் கொண்டு, அந்த பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈட்டுபட்டுள்ளனர். இதுபோன்று 182 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்து வைத்து மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

arrest

இவர்கள் இருவரிடம் சிக்கியவர்களில் ஒரு பெண், கடந்த வருடம் கொல்கத்தா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து  இந்த செயல்களுக்கு உடந்தையாக இருந்த கைலாஷ் யாதவ் கடந்த 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணிடம், பணம் தரவில்லை என்றால், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என கைலாஷ் மிரட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதன் பின்னர் அனீஷ் லோஹரூகா மற்றும் ஆதித்ய அகர்வால் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.