தமிழகம் இந்தியா லைப் ஸ்டைல்

ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெரியவர்..! 'மிடில் பெர்த்' கழண்டு தலையில் விழுந்தது..! அதிர்ச்சி சம்பவம்..!

Summary:

Train middle birth fallen in nagarkovil express

சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் நாகர்கோவில் விரைவு ரயில் நேற்று இரவு புறப்பட்டது.  ரயிலில் S10 பெட்டியில் தர்மராஜ் என்பவர் பயணித்துள்ளார். அனைவரும் நன்கு தூங்கிக்கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தர்மராஜ் படுத்திருந்த இருக்கையின் மேல் இருந்த மிடில் பெர்த் திடீரென கழண்டு அவரது தலையில் விழுந்துள்ளது.

சத்தம் கேட்டு எழுந்த பயணிகள் தர்மராஜை மீட்டனர். மிடில் பெர்த் அவர் தலையில் விழுந்ததில் தர்மராஜின் தலையில் காயம் ஏற்பட்டது. ரயில் பெட்டியில் முதலுதவி பேட்டி இல்லாததால் மதுரை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி அவருக்கு முதலுதவி அளிக்கப் பட்டது.

சமீபத்தில் சிதம்பரம் அருகே ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவரின் கையில் ரயில் ஜன்னல் விழுந்ததில் அவரின் விரல் துண்டானது. அந்த ரயிலிலும் முதலுதவி பெட்டி இல்லாததால் மயிலாடுதுறையில் ரயிலை நிறுத்தி அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement