இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பதறவைத்த சிசிடிவி காட்சி!

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பதறவைத்த சிசிடிவி காட்சி!


train accident


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகுடா ரயில்நிலையத்தில், கர்னூலில் இருந்து செகந்திரபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹூண்ட்ரி விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அதே தண்டவாளத்தில் எதிரே வந்த புறநகர் பயணிகள் ரயில், அங்கு நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது மோதியது.

இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான ரயிலுக்குள் சிக்கிய மின்சார ரயில் ஓட்டுநர், 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ரயிலுக்கு தவறாக சிக்னல் கொடுக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. 

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று தெற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தினால், அவ்வழியாக செல்ல வேண்டிய 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.