மும்பையில் சோகம்!! குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து.. 7 பேர் பலி , 40 பேர் படுகாயம்.!

மும்பையில் சோகம்!! குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து.. 7 பேர் பலி , 40 பேர் படுகாயம்.!


tragedy-in-mumbai-a-sudden-fire-accident-in-a-residenti

மும்பையில் இன்று அதிகாலை கோரேகான் வெஸ்ட் பகுதியில் உள்ள ஜெய் பவானி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீயானது மளமளவென்று அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் பரவத் தொடங்கியது. இதில் 7 பேர் இறந்ததாகவும் சுமார் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தீசம்பவம் பற்றி அதிகாரிகள் தெரிவிக்கையில் தீ கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்து மேல்தளங்களுக்கு பரவியதாக கூறியுள்ளனர். மேலும் கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள கடைகள் மற்றும் வாகனங்கள் மீது  தான் முதலில் தீ பற்றியதாக சொல்ல படுகிறது. இதனால் மக்கள் தப்பித்து செல்வது சிரமமாக இருந்துள்ளது.

Mumbai

இதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்க பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர சம்பவத்தில் 7 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுல்லதாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.