இரு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! உறுதிசெய்த அமைச்சர்! வெளியான அதிர்ச்சித் தகவல்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா உலகம்

இரு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! உறுதிசெய்த அமைச்சர்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகத்தின் பல பகுதிகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது.  கோவிட் 19 என புதிதாக பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

மேலும் உலகளவில் கோவிட் 19 வைரஸ் தாக்குதலால் 1500க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 65000திற்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலக நாடுகளே பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள டைமண்ட் பிரின்சஸ் நிறுவனத்தின் சுற்றுலாகப்பலில் பயணம் செய்த பயணிகளில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் பயணிகள் துறைமுகத்தில் இறக்கப்படாமல் கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அக்கப்பலில் இருந்த இந்தியர்கள் தங்களை மீட்க வேண்டும் என வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில் இந்திய அரசு, ஜப்பான் அரசிடம் பேசி இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொண்டபோது, அவர்களில் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக உறுதிசெய்துள்ளது.  மேலும் இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். 
 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo