தமிழகம் இந்தியா Covid-19 Corono+

டெல்லியிலிருந்து வந்த 45 பேருக்கு கொரோனா.. எஞ்சியுள்ளவர்களை தேடும் பணியில் தமிழக அரசு தீவிரம்!

Summary:

Tn government searches travellers from delhi

தமிழகத்தில் 31.03.2020 இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 45 பேர் டெல்லியில் இருந்து பயணம் செய்தவர்கள்.

நேற்று வரை தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இன்று காலையில் வெளியான தகவலில் புதிதாக 7 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று இரவு அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட தகவலில் புதிதாக 50 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதில் 45 பேர் டெல்லியிலிருந்து பயணம் செய்தவர்கள் ஆவர்.

இவர்கள் அனைவரும் டெல்லியில் நடைபெற்ற ஒரு மதம் சம்பந்தமான மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் கலந்துகொண்ட 1131 பேர் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பியுள்ளனர்.

இவர்களில் 515 பேர் தமிழக அரசால் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் எஞ்சியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement