கேரள விமான விபத்தில் சிக்கிய 3 தமிழர்களின் நிலை என்ன.? வெளியானது அதிகாரபூர்வ தகவல்!

நேற்று பிற்பகல் 3 மணிக்கு 191 பேருடன் துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒடு பாதையிலிருந்து விலகியதால் விபத்து ஏற்பட்டு, விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் 3 பேர் பயணித்தனர். அவர்கள் மூவருமே சுற்றுலாவுக்காக துபாய் சென்ற போது ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் அந்த விமானம் மூலம் தாயகத்திற்கு புறப்பட்டனர்.
இந்த நிலையில் கோழிக்கோடு விமான விபத்தில் தமிழக பயணிகள் மூவருமே பாதுகாப்பாக உள்ளனர் என்ற மகிழ்ச்சியான தகவலை மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.