பாகிஸ்தான் கொடியுடன் சுற்றித் திரிந்த... லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கைது..!

பாகிஸ்தான் கொடியுடன் சுற்றித் திரிந்த... லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கைது..!



Three members of the Lashkar-e-Taiba terrorist organization were arrested for walking around with the Pakistani flag..

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல்துறையினர் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையில் ​​கோரிபுராவில் இருந்து போமை பகுதி நோக்கி வந்த மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை தடுத்து நிறுத்தினர். 

ஆனால் அந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர், பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாரிக் அஷ்ரப், சக்லைன் முஷ்டாக் மற்றும் தவ்பீக் ஹசன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர். 

மேலும் நடத்தப்பட்ட சோதனையில், தீவிரவாதிகள் வைத்திருந்த பாகிஸ்தான் கொடிகள், மூன்று கை எறிக்குண்டுகள் போன்றவை அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை அந்த மூன்று பேரும் தேடி வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று பேர் மீதும், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.