
Thiripura
திரிபுரா பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தா பைத்யா. இவர் அப்பகுதியில் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை முதலில் அவரது தாயும், தம்பியும் தான் பார்த்துள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதில் என்ன கொடுமை என்றால் பைத்யா தூக்கிய தொங்கிய சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் பைத்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் குடும்ப பிரச்சினை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement