கோவிலில் திருட்டு முயற்சி.. ஸ்பாட் பனிஸ்மென்ட் கொடுத்த அம்மன்.. பொந்துக்குள் சிக்கி ஐயோ, அம்மா கதறல்..!

கோவிலில் திருட்டு முயற்சி.. ஸ்பாட் பனிஸ்மென்ட் கொடுத்த அம்மன்.. பொந்துக்குள் சிக்கி ஐயோ, அம்மா கதறல்..!


thief-went-to-temple-inside-trapped

கோவிலில் உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன், பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜதுபுடி கிராமத்தில் ஜே.மி.எல்லம்மா என்ற ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலானது ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது. அத்துடன் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் தினமும் பூஜைகள் நடைபெற்று, ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

இதனை தொடர்ந்து நேற்று காலை கோவில் வழியாக சில பேர் நடந்து சென்றபோது, கோவிலில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட திசைப்பக்கம் சென்றபோது, கோவில் சுவற்றில் உள்ள ஓட்டை வழியே ஒரு மர்ம நபர் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தது தெரியவந்தது. மேலும், இவர் எதற்காக உள்ளே சென்றார்? என பார்த்தபோது கோவில் நகைகளை திருடியுள்ளார் என்பதும் தெரிந்தது. இதனையடுத்து பொதுமக்கள் நீண்ட நேரமாகப் போராடி அவரை வெளியே இழுத்தனர்.

மேலும், இந்த விஷயம் தொடர்பாக காஞ்சிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் என தெரியவந்தது. இவரது பெயர் அப்பாராவ் (வயது 25). இவர் நேற்றுமுன்தினம் கோவிலுக்கு வந்து ஜன்னல் கம்பிகளை உடைத்து விட்டு, அடுத்த நாள் கோவிலில் நகை திருட திட்டமிட்டதாக கூறியுள்ளார். 

மேலும், உண்டியலில் இருந்த காணிக்கை மற்றும் சுவாமியின் தங்கம், வெள்ளி போன்ற  நகைகளை சுருட்டிக்கொண்டு இந்த வழியாக செல்ல முயன்றபோது சிக்கியுள்ளார். வெளியே வர முடியாமல் தவித்தது மட்டுமல்லாமல் நீண்ட நேரம் சத்தம் போட்டும் யாரும் கேட்காத நிலையில், மறுநாள் காலை வந்த மக்களிடம் கெஞ்சி அவர்கள் இவரை மீட்டு உள்ளனர் என தெரியவந்தது.

இதனையடுத்து அப்பாராவ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நகை மற்றும் பணத்தை மீட்டனர். இதற்கிடையில், அவர்  சிக்கிக் கொண்ட காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்த பொதுமக்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.