1000, 2000 கிடைக்கும்னு போனோம்.. ஆனால்!! திருட சென்ற இடத்தில் திருடர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! அடுத்து நடந்த ட்விஸ்ட்..
1000, 2000 கிடைக்கும்னு போனோம்.. ஆனால்!! திருட சென்ற இடத்தில் திருடர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! அடுத்து நடந்த ட்விஸ்ட்..

திருட போன இடத்தில் அதிக பணம் இருந்த மகிழ்ச்சியில் திருடன் ஒருவனுக்கு மாரடைப்பு வந்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவத்தை சேர்ந்த நவாப் ஹைதர் என்பவர் கோத்வாலி தேஹாத் என்ற பகுதியில் பொதுசேவை மையம் ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் தனது சேவை மையத்தில் வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை எனவும், யாரோ திருடி சென்றுவிட்டதாகவும் நவாப் ஹைதர் கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடினர். போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் நுஷாத் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரும், அஜாஜ் என்ற மற்றொரு நபரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து வாக்குமூலம் கொடுத்த நுஷாத், "நானும் அஜாஜ் என்ற மற்றொரு நபரும் சேர்ந்துதான் இந்த திருட்டை செய்தோம். சேவை மையத்தில் 1000 அல்லது 2000 இருக்கும் என்று நினைத்துதான் நாங்கள் திருட சென்றோம். ஆனால் அங்கு கட்டு கட்டாக 7 லட்சம் பணம் இருந்ததை பார்த்ததும் அஜாஜ் க்கு மாரடைப்பு வந்துவிட்டது.
இதனால் திருடிய பணத்தில் பெரும்பங்கை அவரது மருத்துவ செலவிற்காக செலவிடும், மீதமிருந்த பணத்தை வைத்து டெல்லிக்குக் சென்று அங்கு சூதாட்டத்தில் பயன்படுத்தினேன்" என போலீசாரிடம் கூறியுள்ளான்.
இதனை அடுத்து நுஷாத்திடம் இருந்த ரூ.3.7 லட்சம் பணம், இரண்டு கைத்துப்பாக்கி, ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததையும் போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர்.