இந்தியா

அடடா யாரு சாமி நீ.. வேற லெவல் திருடன்..! கடிதத்தை பார்த்து நெகிழ்ந்துபோன குடும்பத்தார்.!

Summary:

அடடடா..இப்படியும் ஒரு திருடனா.? கடிதத்தில் திருடன் எழுதப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்..!!

கடந்த மாதங்களாக கேரள பகுதியில் அதிகம் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஒருவர் வீட்டில்  பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டன. இதனையடுத்து, நேற்று முன் தினம் திருட்டு சம்பவம் நடந்த அந்த வீட்டின் நபர் எப்போதும் போலவே காலையில் வீட்டின் கதவை திறந்துள்ளார்.

அப்போது அவரது  வீட்டின் வாசலில் 3 பைகள் இருந்ததை பார்த்துள்ளார். அந்த பையை திறந்து பார்த்தபோது அதில், பணம், தங்கச் சங்கிலி,  தங்க கட்டி மற்றும்  ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில், கொரோனா காலத்தில் பல வீடுகளில் திருடிவிட்டேன். எந்தெந்த வீட்டில் எவ்வளவு திருடினேன் என்பதனை கடிதத்தில் எழுதி, திருடிய நகை, பணத்தை வைத்துள்ளேன். சொந்தக் காரரிடம் நகை மற்றும் பணத்தை ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

பின்னர் அந்த நபர் கடிதத்துடன் நகை மற்றும் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து, நகை மற்றும் பணத்தை சொந்த காரரிடம் ஒப்படைக்க காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 


Advertisement