இந்த 6 மாநிலங்களில் இருந்து மட்டுமே இந்தியாவில் 83.14 சதவீத வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.. வெளியான தகவல்..

இந்த 6 மாநிலங்களில் இருந்து மட்டுமே இந்தியாவில் 83.14 சதவீத வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.. வெளியான தகவல்..



These 6 states account for 83 percentage for new corona

இந்தியாவில் வேகமாக பரவிவரும் 83.14 சதவிகித வைரஸ் தொற்று 5 மாநிலங்களில் இருந்து மட்டும் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் ஆயிரத்தை தாண்டி வருகிறது.

corona

இந்நிலையில் மரபணு மாற்ற கொரோனா வைரசுகளில் மிகவும் வலுவான புரதம் உருவாகி உள்ளதால், இப்போது, அதன் பரவல் வேகமடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலின்படி மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இந்த 6 மாநிலங்களில் இருந்துமட்டும் 83.14 சதவிகித வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.