வேஷ்டியை அவிழ்த்து பெண்களின் முகத்தை மூடி.. பாலியல் தொல்லை அளித்த வாலிபர் கைது..!!

வேஷ்டியை அவிழ்த்து பெண்களின் முகத்தை மூடி.. பாலியல் தொல்லை அளித்த வாலிபர் கைது..!!


The police arrested the young man who was sexually harassing the woman by covering her face with a vest

கேரளாவில், வேஷ்டியை அவிழ்த்து, வேஷ்டியால் பெண்ணின் முகத்தை மூடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

கேரளாவில் கடந்த 1995-ஆம் வருடம் மோகன்லால் நடித்த ஸ்படிகம் என்ற படம் வெளியானது. இந்தப்படத்தில் மோகன்லால் தன் எதிரிகளைப் பின் தொடர்ந்து சென்று தன் வேஷ்டியை அவிழ்த்து அவர்களின் முகத்தில் போட்டு மூடி அவர்களைத் தாக்குவார். எனவே எதிராளிகளுக்குத் தன்னைத் தாக்கியது யார் என்பதே தெரியாது. இதே பாணியை பயன்படுத்தி, கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். 

வேலைக்குச் சென்று விட்டு தனிமையில் வீடு திரும்பும் பெண்களை பின் தெடர்ந்து விஷ்ணு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண்களை பின் தொடர்ந்து சென்று, திடீரென தன் வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடி விட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அதேநேரம் கண் இமைக்கும் நொடியில் மறைந்து விடுவார். இதனால் இவரது நண்பர்கள் இவரை ஸ்படிகம் விஷ்ணு என்று அழைத்து வந்தனர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரினால் பாலக்காடு தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர். இதே போல அவர் வேறு பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்தும், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.