சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றிய மேனேஜர்... வெளியான திடுக்கிடும் சம்பவம்...!

சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றிய மேனேஜர்... வெளியான திடுக்கிடும் சம்பவம்...!


The manager poured acid in the girl's mouth... the shocking incident was revealed.

புதுடெல்லியில் தொழிற்சாலையின் மேனேஜர் ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, வாயில் ஆசிட் ஊற்றியுள்ளார்.

புதுடெல்லியில் செருப்பு தொழிற்சாலை ஒன்றின் மேனேஜராக வேலை செய்து வருபவர் ஜெய் பிரகாஷ் (31). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவரது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை அதனால் உதவி செய்ய ஆள் வேண்டும் என கூறி, அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 15 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

பின்னர் சிறுமியை அவரது வீட்டில் இருந்த போது, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து அந்த சிறுமி வீட்டிற்குச் சென்ற போது, சிறுமியை அழைத்து பிரகாஷ், அவளின் வாயில் கட்டாயப்படுத்தி ஆசிட் ஊற்றியுள்ளார்.

இதனால், சிறுமி வீட்டிற்கு வந்தவுடன் மயக்கமடைந்தாள். உடனடியாக சிறுமியின் பெற்றோர் அவரை ஹாஸ்பிடலில் சேர்த்தனர். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் பிறகு நடந்த சம்பவம் பற்றி அறிந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர்,  பிரகாஷை கைது செய்தனர். பிரகாஷ் மீது நங்லோய் காவல் நிலையத்தில், போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால், டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை வழங்க வேண்டும் என்று ஆணையம் கேட்டுள்ளது.

மேலும் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயன்றதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. சிறுமியை வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. எங்கள் குழு தொடர்ந்து சிறுமியை கண்காணித்து சிறுமிக்கும், சிறுமியின் குடும்பத்திற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. என்று சுவாதி மலிவால் அறிக்கையில் கூறியுள்ளார்.