#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. திடீரென பழக்கத்தை கட் செய்த மாணவி; ஆத்திரத்தில் இளைஞர் செய்த விபரீத செயல்..!
டெல்லியில், 16 வயது மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் இளைஞருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். திடீரென அந்த பெண் பேசுவதை நிறுத்திக் கொண்டதால்
அந்த இளைஞர் ஆத்திரம் அடைந்தார்.
எனவே, அந்தப் பெண் பள்ளியில் இருந்து திரும்பி வரும் வழியில் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவி அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, இளைஞருக்கு உதவியாக இருந்த மேலும் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
.