ஸ்பெல்லிங் தவறாக கூறிய சிறுமி... கையை உடைத்த ஆசிரியர்.. கொடூர சம்பவம் ..!

ஸ்பெல்லிங் தவறாக கூறிய சிறுமி... கையை உடைத்த ஆசிரியர்.. கொடூர சம்பவம் ..!



The girl who said the spelling wrong... the teacher who broke her arm... a horrible incident...!

மத்திய பிரதேசத்தில் ஆங்கில வார்த்தைக்கு தவறாக ஸ்பெல்லிங் கூறிய 5 வயது சிறுமியின் கையை ஆசிரியர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில்  வசித்து வருபவர்கள் கிஷோர் குமார் - லட்சுமி பாய் தம்பதியினர். இவர்களுக்கு சுவாதி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுவாதியை அங்குள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்து ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அந்தப் பள்ளியில் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

Arrogant teacher

இதனையடுத்து அந்த நுழைவு தேர்வில் வெற்றி பெறுவதற்காக சிறுமி சுவாதியை பெற்றோர் அருகில் உள்ள ஒரு டியூஷன் சென்டரில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் டியூசன் சென்டர் சென்ற சிறுமியிடம் ஆசிரியர் பிரயாக் விஸ்வகர்மா சில ஆங்கில சொற்களுக்கு ஸ்பெல்லிங் சொல்லுமாறு கேட்டுள்ளார்.

அப்போது ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு மட்டும் சிறுமி தவறான ஸ்பெல்லிங் கூறியதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் பிரயாக் சிறுமியின் வலது கையை முறித்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சிறுமியின் கையில் முறிவு ஏற்பட்டு வலியால் துடிக்கவே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் ஆசிரியர் பிரயாக்.

இதனையடுத்து அங்கிருந்த மற்ற ஆசிரியர்கள் சிறுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் சிறுமியின் கையில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் பிரயாக்கை கைது செய்துள்ளனர்