இந்தியா

சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை.! வீட்டிலேயே குழந்தை பிரசவித்த சிறுமி!

மும்பையில் 18 வயது இளைஞருக்கும் 16 வயது சிறுமிக்கும் 2 வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் அதிகரித்து நாளடைவில் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை வரவழைத்துள்ளார்.

அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறுமி தான் கர்ப்பமானதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அந்த சிறுமி வீட்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


Advertisement