இந்தியா

ரயில் பெட்டிகளை அனாதையாக விட்டுவிட்டு, தனியே பிரிந்து சென்ற ரயில் இன்ஜின்! பதறிப்போன பயணிகள்!

Summary:

The engine that broke apart from the train compartment

ஆந்திரா நோக்கி சென்றுக் கொண்டிருந்த விசாகா விரைவு ரயிலின் இன்ஜின் விசாகப்பட்டினத்தில் நடுவழியில் திடீரென தனியாக‌ப் பிரிந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றதால் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து ஆந்திராவின் செகந்திரபாத் வரை செல்லும் விசாகா விரைவு பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது அதனை என்ஜினுடன் இணைத்திருந்த இணைப்பு கம்பி கழன்று விழுந்ததால் பெட்டிகள் அனைத்தும் நர்சிப்பட்டனம் என்ற இடத்தில் நின்றன.

அந்த ரயிலின் இன்ஜின் மட்டும்  தனியே பிரிந்து 10 கிலோ மீட்டர் வரை சென்றுள்ளது. இந்நிலையில் பெட்டிகள் மட்டும் தனியாக நிற்பதை அறிந்த பயணிகள் கொடுத்த தகவலையடுத்து ரயில் ஓட்டுநருக்கு தகவல் அகிக்கப்பட்டது.

இதனையடுத்து  ரயில் ஓட்டுநர் மீண்டும் ரயில் என்ஜினை நர்சிப்பட்டினம் ஒட்டி வந்தார். பின்னர் எஞ்சினை பெட்டிகளுடன் பொறுத்தப்பட்டு வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது. அங்கு நடந்த சம்பவத்தால் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.


Advertisement