தாயை கொலை செய்து... உடலை துண்டு துண்டாக வெட்டி.. பல இடங்களில் மறைத்து வைத்த மகள்...!!
மும்பையில் உள்ள லால்பாக் இப்ராகிம் கசம் சால் பகுதியில் வசிப்பவர் வீனா (53). இவரது மகள் ரிபுல் ஜெயின் (23). சம்பவத்தன்று வீனாவின் வீட்டுக்கு உறவினர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது உள்பக்கமாக வீடு பூட்டப்பட்டு இருந்தது.
வெகு நேரமாக கதவை தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. அதே சமயம் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த உறவினர் சம்பவம் குறித்து காலாசவுக்கி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல்துறையினர் வந்து வீட்டை திறந்து பார்த்தனர். வீட்டுக்குள் ரிபுல் ஜெயின் இருந்தார். தாய் வீனாவை காணவில்லை.
இந்நிலையில் வீட்டில் இருந்த பீரோவில் மனித உடல் அழுகிய நிலையில் இருந்தது எனவே காவல்துறையினர் ரிபுல் ஜெயினிடம் விசாரனை செய்தனர். இதில், ரிபுல் ஜெயினுக்கும் தாய் ரீணாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் தாய் மீது மகளுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
இதனால், தாய் வீனாவை ரிபுல் ஜெயின், கொலை செய்துள்ளார். அதன் பின்னர் மார்பிள் கட்டர், கத்தியை பயன்படுத்தி தாய் லீனாவின் உடலை துண்டு, துண்டுடாக வெட்டி கூறுபோட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர், வீட்டில் இருந்த பீரோ, பாத்திரம், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் இருந்து வீனாவின் உடல் பாகங்களை மீட்டனர்.
அதன் பின்னர் உடல் பாக மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாயை கொலை செய்த ரிபுல் ஜெயினை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர், வீனாவை இரண்டு மாதங்களுக்கு மேலாக பார்க்கவில்லை என கூறியுள்ளனர். எனவே லீனாவின் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதாஎன்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.