வகுப்பரையில் மாணவர் செய்த செயல்... ஆத்திரத்தில் காலால் எட்டி உதைத்த ஆசிரியர்...!

வகுப்பரையில் மாணவர் செய்த செயல்... ஆத்திரத்தில் காலால் எட்டி உதைத்த ஆசிரியர்...!


The act of the student in the lecture... The teacher kicked him with his foot in anger...!

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் பென்ஸ் சர்க்கிள் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில்  மாணவனை ஆசிரியர் அடித்து உதைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளியில் ஆசிரியர்  பாடம் எடுக்கும்போது ஒரு மாணவன் பாடத்தை கவனிக்காமல் தனது செல்போனில் இயர் போன் மூலம் பாட்டு கேட்டு கொண்டு இருந்துள்ளார். இதை கவனித்த ஆசிரியர் மாணவரின் இந்த செயலால் கோபமடைந்தார். எனவே ஆசிரியர் அந்த மாணவனின் இருக்கை அருகே வந்து கன்னத்தில் அறைய தொடங்கினார்.

அதுமட்டுமின்றி ஆத்திரத்துடன் மாணவனை காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இந்த காட்சிகளை மற்ற மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர். ஆசிரியர் மாணவனை சரிமாரியாக தாக்கும் காட்சிகள்  சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியரின் இந்த செயலுக்கு மாணவர் சங்கங்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர், அதிகாரிகள் ஆகியோர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.