மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
சிக்கிமில் பயங்கரம்.. ராணுவ வாகனம் விபத்து.. பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு..!

சிக்கிம் மாநிலம் சாட்டன் என்ற பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் 3 வாகனங்களில் இன்று காலை புறப்பட்டனர். செமா என்ற பகுதியில் ஒரு வளைவில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அதில் ஒரு ராணுவ வாகனம் மட்டும் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் இச்சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் இந்த கோர விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலியானதாக இந்திய ராணுவம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து காயமடைந்த 4 ராணுவ வீரர்களை மீட்ப்பு குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கோர விபத்தில் ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.