இந்தியா

கட்டாயத்திருமணம்.. கணவனை போட்டுத்தள்ள மனைவி போட்ட பகீர் திட்டம்.! விசாரணையில் வெளிவந்த உண்மை.!

Summary:

கட்டாயத்திருமணம்.. கணவனை போட்டுத்தள்ள மனைவி போட்ட பகீர் திட்டம்.! விசாரணையில் வெளிவந்த உண்மை.!

தெலுங்கானா மாநிலத்தின் கிராம பகுதியில் சந்திரசேகர் என்பவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் சியாமளா என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தகைய நிலையில் கடந்த 20ஆம் தேதி சந்திரசேகர் மரணமடைந்தார்.

இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவரது மனைவி சியாமளா மீது சந்தேகம் ஏற்பட்டது. 

அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிபிடி விசாரணையில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் சிவகுமார் என்பவரை காதலித்து வந்ததாகவும், பெற்றோர் விருப்பம் இல்லாமல் சந்திரசேகரை திருமணம் செய்து வைத்ததாகவும், எனவே அவரை கொலை செய்ய உணவில் எலி மருந்தை கலந்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார். 

இதில் சிகிச்சை பெற்று அவர் உயிர்பிழைத்த நிலையில், அவரை மீண்டும் கொலை செய்ய சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியுள்ளனர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.


Advertisement