இந்தியா

ஒரு நொடிதான்!! துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்!! செக் போஸ்டை கடக்க முயன்றபோது விபத்து!! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

Summary:

தெலங்கானாவில் பைக்கில் அதி வேகமாக வந்த இரண்டு இளைஞர்கள் செக் போஸ்டை கடக்க முயன்றபோது, இரும

தெலங்கானாவில் பைக்கில் அதி வேகமாக வந்த இரண்டு இளைஞர்கள் செக் போஸ்டை கடக்க முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதி ஒரு இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் பல இடங்களில்  முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் பல இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஜன்னாரம் பகுதியில் போலீசார் செக் போஸ்ட் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், போலீசார் சிக்னல் கொடுத்தும் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றதில், பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த இளைஞர் இரும்பு கம்பியில் மாட்டி, தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement