எனக்கு கணவனும் வேணாம்.... பிள்ளைகளும் வேணாம்! அம்மா போன அடுத்த நொடி அப்பாவும் போய்ட்டாரு..... போலீஸ் ஸ்டேஷனில் அழுது துடித்து தனியாக தவித்த இரு பெண் குழந்தைகள்! கண்ணீர் வரவைக்கும் காட்சி!!!
தெலுங்கானாவில் குடும்ப பிரச்சினை எதிர்பாராத திருப்பம் எடுத்துள்ளது. கரீம்நகரைச் சேர்ந்த தம்பதியினர், தங்களின் இரண்டு பெண் குழந்தைகளையே காவல் நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேரம் அந்த குழந்தைகள் அங்கேயே தவித்த சம்பவம் கவலைக்கிடம் ஆகியுள்ளது.
காதல் திருமணம்... பின்னர் ஏற்பட்ட பிளவு
கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, லலிதா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இதையடுத்து பிரச்சினை எல்.எம்.டி காவல் நிலையம் வரை சென்றது.
சமரச பேச்சுவார்த்தையில் அதிர்ச்சி திருப்பம்
போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் பேச முயன்றனர். ஆனால் பேச்சுவார்த்தையின் போது ஆத்திரமடைந்த லலிதா, திடீரென தனது தாலி மற்றும் மெட்டியை கழற்றி மேசை மீது வைத்துவிட்டு, “எனக்கு கணவனும் வேண்டாம், பிள்ளைகளும் வேண்டாம்” என்று கூறி அங்கிருந்து வெளியேறினார். இதனால் அங்கு இருந்தவர்களே சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! திடீரென பேருந்தின் தளம் உடைந்து 6 வயது குழந்தை உடல் நசுங்கி பலி! அண்ணன் கண்முன் நடந்த கொடுமை!!!
காவல் நிலையத்தில் தவித்த குழந்தைகள்
இதையடுத்து ரவிக்குமாரும் தனது குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளார். பெற்றோரால் கைவிடப்பட்ட அந்த இரண்டு சிறுமிகள் காவல் நிலையம் முழுவதும் அழுது அலைந்தனர். இந்த நிலையை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் அன்வர் உடனடியாக குழந்தைகளுக்கு உதவி செய்து, பின்னர் அவர்களை அவர்களின் பாட்டியிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். பெற்றோரின் இந்த செயல் அந்த பகுதியில் கடும் விமர்சனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகளை இப்படிப் பட்ட நிலையில் விட்டுச் சென்ற சம்பவம் சமூகத்தில் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. குடும்ப பிரச்சினைகள் இருந்தாலும், குழந்தைகளின் நலனை புறக்கணிக்கக்கூடாது என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
Telangana couple abandons 2 young daughters at Karimnagar police station during counselling over husband’s alcohol addiction & fights.
Wife removed her mangalsutra, both parents fled leaving the crying kids behind. Police comforted the children & handed them to grandparents. pic.twitter.com/l5jFQVZfJ0
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 29, 2026