என்ன... களத்தில் இப்படி இறங்கிட்டாரே! அரசு அலுவலக டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்....! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!
தெலுங்கானாவில் அரசு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்கு நிலவிய மோசமான தூய்மை நிலையைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வின்போது, அசுத்தமான கழிவறையை பார்த்த அவர் அதிகாரிகளை கண்டித்ததுடன், தானே களத்தில் இறங்கி அதை சுத்தம் செய்தார்.
கோப்புகள் தேக்கம் குறித்து அமைச்சரின் அதிருப்தி
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் பெந்த்லவெல்லி மண்டலத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் திடீரென சென்றார். அங்கு வருவாய்த் துறை தொடர்பான கோப்புகள் மற்றும் பொதுமக்களின் மனுக்கள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது பல கோப்புகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கலிகாலம்.... பெற்றோர் அனுமதியின்றி மாணவிகளை வெளியில் அழைத்து சென்று ரகசிய குளியல்! அணைக்கட்டில் கும்மாளம் போட்ட ஆசிரியர்...!!!
அசுத்தமான கழிவறையை பார்த்து அதிர்ச்சி
ஆய்வின் தொடர்ச்சியாக அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறையையும் அமைச்சர் பார்வையிட்டார். பொதுமக்களும் ஊழியர்களும் பயன்படுத்தும் அந்த இடம் மிகவும் அசுத்தமாகவும், மோசமான நிலையிலும் இருந்தது. இதைப் பார்த்து அதிருப்தி அடைந்த அமைச்சர், அலுவலகத்தை சுத்தமாக பராமரிக்காத அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கடுமையாகக் கண்டித்தார்.
தானே சுத்தம் செய்த அமைச்சர்
வாய்மொழி எச்சரிக்கையுடன் நிறுத்திக்கொள்ளாமல், அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் தானே அந்த கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார். அமைச்சரின் திடீர் ஆய்வு அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்களில் தூய்மையை பேணுவதும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்வதும் அதிகாரிகளின் முக்கிய பொறுப்பு என அவர் தெரிவித்தார். இதையடுத்து நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்கவும், அலுவலக வளாகத்தை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் மீண்டும் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் நேரடியாக வந்து செல்லும் அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் முறையாக இருக்க வேண்டும் என்பதையே அமைச்சர் இந்த ஆய்வின் மூலம் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக அரசு அலுவலக தூய்மை மற்றும் நிலுவை கோப்புகளை விரைவாக முடிப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
तेलंगाना के मंत्री जुपल्ली कृष्णा राव ने नागरकुर्नूल जिले के पेंटलावेल्ली मंडल में तहसीलदार कार्यालय का अचानक निरीक्षण किया. निरीक्षण के दौरान, मंत्री ने देखा कि कार्यालय के शौचालय बहुत गंदे थे. गंदगी पर नाराजगी जाहिर करते हुए, जुपल्ली कृष्णा राव ने खुद शौचालय साफ किया.… pic.twitter.com/Gp5pC2X0T7
— NDTV India (@ndtvindia) August 23, 2026
இதையும் படிங்க: 15 நிமிடங்கள் லிஃப்டில் தவித்த 8 வயது சிறுமி! சாவியிலும் திறக்காத கதவு! இறுதியில் துணிச்சலாக செய்த செயல்..... திக் திக் வீடியோ..!!!