ஐயோ.. கடவுளே! 8 ஆண்டு கஷ்டம்.... 12 லட்சம் ஆச்சே? பெட்டியைத் திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி! துண்டு துண்டான பணத்தை எண்ணிய கணவன்! கலங்க வைக்கும் சம்பவம்!!!



rats-destroyed-womans-savings

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் பெண் ஒருவர் கணவருக்குத் தெரியாமல் 8 ஆண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த பணம், எலிகளால் நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்க நகை வாங்க வேண்டும் என்ற ஆசையில் சிறுகச் சிறுகச் சேர்த்த தொகை ரூ.12 லட்சத்தை நெருங்கிய நிலையில், பெட்டியைத் திறந்தபோது அவரது கனவு கலைந்தது.

8 ஆண்டுகளாக ரகசியமாக சேமித்த பணம்

கோண்டா பகுதியில் வசிக்கும் அந்தப் பெண், வீட்டின் அலமாரியில் இருந்த ஒரு பெட்டிக்குள் யாருக்கும் தெரியாமல் பணத்தை சேமித்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக கிடைத்த பணத்தை சிறிது சிறிதாக ஒதுக்கி வைத்த அவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்க நகைகள் வாங்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அடக்கடவுளே... வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த சிறுமி! நொடியில் கார் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து.... பதறவைக்கும் காட்சி!!!

பெட்டியைத் திறந்தபோது அதிர்ச்சி

இதையடுத்து பெட்டியைத் திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் எலிகளால் கடித்துக் குதறப்பட்டிருந்தன. பல நோட்டுகள் சிறு சிறு துண்டுகளாக சிதறிக் கிடந்ததால், தனது ரூ.12 லட்சம் சேமிப்பு பாழாகிவிட்டதைப் பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். வேறு வழியின்றி நடந்ததை கணவரிடம் தெரிவித்து அழுதுள்ளார்.

சேதமடைந்த நோட்டுகளை மாற்ற முடியுமா?

மனைவி ரகசியமாக இவ்வளவு பெரிய தொகையைச் சேமித்து வைத்திருந்ததைக் கண்டு கணவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும், கிழிந்த ரூபாய் நோட்டுத் துண்டுகளை ஒன்றாகச் சேர்த்து அவற்றின் மதிப்பைக் கணக்கிடும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போது சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் வங்கியில் வழங்கப்பட்டால் மாற்றிக் கொள்ள முடியுமா என்பது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: 4 மாத கர்ப்பிணி மகளை ஆற்றில் தள்ளிவிட்டுக்கொன்ற தந்தை.. திடுக்கிடவைக்கும் காரணம்.. பதறவைக்கும் சோகம்.!