அம்மா, அப்பா.. என்னால மனைவியின் டார்ச்சலை தாங்க முடியல..! இனி இந்த வாழ்க்கை வேணாம்... நீங்களாவது சந்தோஷமாக இருங்க! பெற்றோருக்கு செல்ஃபி வீடியோ அனுப்பிட்டு மகன் எடுத்த அதிர்ச்சி முடிவு..! பகீர் வீடியோ..!!!



telangana-man-missing-after-video-to-parents

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில், மனைவி தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறி பெற்றோருக்கு செல்ஃபி வீடியோ அனுப்பிய 23 வயது இளைஞர் மாயமாகியுள்ளார். மோத்திகனாபூர் கிராமத்தைச் சேர்ந்த சிவபிரசாத், ஹைதராபாத் நோக்கிச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.

பெற்றோருக்கு வீடியோ அனுப்பிய இளைஞர்

சிவபிரசாத் தனது வீடியோவில், மனைவி அடிக்கடி தகாத வார்த்தைகளால் திட்டித் துன்புறுத்துவதாகவும், தன்னை அடித்துக் கடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டில் உள்ள பெரியவர்கள் முன்பு தன்னை மட்டுமே குற்றவாளியாகச் சித்தரிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இப்படி ஒரு பழக்கமா..? வயிற்று வலியால் துடித்த 15 வயது சிறுமி! ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்... வயிற்றிலிருந்து சிறுகுடல் வரை செல்லும் அறிய நோய்! விசித்திர சம்பவம்..!!!!

பெண்களுக்குச் சாதகமாக உள்ள சட்டங்களைப் பயன்படுத்தி தன்னைக் கொன்றுவிடுவதாக மனைவி மிரட்டுவதாகவும் அந்த வீடியோவில் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இனி இந்த வாழ்க்கையை வாழ விருப்பமில்லை என்றும், பெற்றோர் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் உருக்கமாகப் பேசியுள்ளார்.

கோத்தூர் அருகே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மாயம்

வீடியோவை அனுப்பிய பிறகு, சிவபிரசாத் தனது ஸ்கூட்டரில் ஹைதராபாத் நோக்கிப் புறப்பட்டுள்ளார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கோத்தூர் அருகே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அவர் அங்கிருந்து மாயமானது தெரியவந்துள்ளது.

மகனின் வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிவபிரசாத் எங்கு சென்றார், தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது...! வயதான தந்தையின் உடம்பில் மகன் செய்த அந்த ஒரு காரியம்... குழந்தை மாறி பாத்துக்கலாட்டினாலும் கொடுமை படுத்த வேண்டாம்! கண்கலங்க வைக்கும் காட்சி..!