பல் சிகிச்சைக்காக சென்று உதட்டை இழந்த இளம்பெண்.. கைதவறியதால் நடந்த சோகம்.!

பல் சிகிச்சைக்காக சென்று உதட்டை இழந்த இளம்பெண்.. கைதவறியதால் நடந்த சோகம்.!


Telangana Hyderabad Women Lip chopped by Dentist 


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைத்ராபாத் பகுதியில் பல் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பல் வலி சிகிச்சைக்காக இளைஞர் ஒருவர் சிகிச்சை எடுக்க சென்றுள்ளார். 

அச்சமயம் இளைஞருக்கு அதிக அளவு மயக்க மருந்து கொடுக்கவே, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். 

இதனிடையே, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவரின் உதடு துண்டிக்கப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு அதே மருத்துவமனையில் நடந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. பெண் பல் சிகிச்சைக்காக அனுமதியாகியிருந்தபோது, உதடை நறுக்கியதாக தெரியவருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உதடு தற்போது அவர் கொடுத்த மருந்தால் வீங்கி காணப்படுகிறது. 

இருவேறு சம்பவங்களுக்கும் தற்போது மருத்துவருக்கு எதிராக அமைந்துள்ளதால், காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கின்றனர்.