மனஉளைச்சலில் 2 தலித் சிறுமிகள் தற்கொலை; ஆசிரியர் கண்டித்ததால் கடித்து எழுதிவைத்து சோகம்.!Telangana Hyderabad SCST Hostel 2 Minor Girls Suicide 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில், எஸ்.சி & எஸ்.டி அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளில், 15 வயதுடைய 2 சிறுமிகள் கடந்த பிப்.3 அன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமிகள் எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது. 

அக்கடிதத்தில் தாங்கள் செய்ய விசயத்திற்கு வகுப்பு ஆசிரியர் கண்டித்த காரணத்தால் நாங்கள் தற்கொலை செய்கிறோம். எங்களின் தரப்பு நியாயத்தை யாரும் புரிந்துகொள்ளவில்லை. மன அழுத்தத்தால் இம்முடிவை எடுக்கிறோம். எங்களுக்கு உறுதுணையாக இருந்த விடுதி கண்காணிப்பாளருக்கு நன்றி. அவர் எங்களை மனம் தேறி வர யோசனை கூறினாலும், மனம் பட்ட காயத்தால் இம்முடிவை எடுக்கிறோம்" என கூறியுள்ளனர். 

Telangana

விசாரணையில் சிறுமிகள் பள்ளியில் செய்த தவறுக்காக, அவர்கள் இனி அத்தவறை செய்ய கூடாது என ஆசிரியர் கண்டித்து இருக்கிறார். இதனாலேயே இருவரும் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வருகிறது.