பால்கனியில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி.!TELANGANA HYDERABAD CHILD DIED FALLEN FROM BOLCONY TO NEIGHBOURHOOD TERRECE 

 

பச்சிளம் குழந்தை வீட்டில் இருப்போர் கவனத்துடன் இருக்க வேண்டியதை அறிவுறுத்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கச்சிக்குடா பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு, ஒன்றரை வயதுடைய பிரியங்கா என்ற மகள் இருக்கிறார். 

சிறுமி எப்போதும் வீட்டின் பால்கனி பகுதியில் இருந்து வேடிக்கை பார்ப்பது வழக்கம். இன்று சிறுமி வழக்கம்போல பால்கனியில் இருந்தபோது, அங்கிருந்த சேரில் ஏறி இருக்கிறார். 

சேரில் இருந்தவாறு அவர் வேடிக்கை பார்க்க முற்பட்டபோது, தவறி பக்கத்து வீட்டின் மாடியில் விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கச்சிக்குடா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.