தறிகெட்டு இயங்கிய கார்.. சாலையோரம் நின்ற பாதசாரி பெண்கள் 4 பேர் பரிதாப பலி..!Telangana Hyderabad Car Accident 4 Pedestrians Died

சாலையில் சென்ற கார் நடைபாதையில் மோதி ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத், கரீம் நகரில், காமன் சந்திப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் கார் சென்று கொண்டு இருந்த நிலையில், மற்றொரு கார் அதன் மீது மோதுவது போல வந்துள்ளது. சுதாரித்த ஓட்டுநர் வாகனத்தை வேகமாக திருப்ப, அது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பெண்கள் மீது மோதியுள்ளது. 

Telangana

இந்த விபத்தில், சாலையோரம் நின்று கொண்டு இருந்த பெண்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி துடித்துள்ளனர். விபத்தை தொடர்ந்து காரில் பயணம் செய்தவர்கள் தப்பி செல்லவே, அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

Telangana

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.