இந்தியா

லாக்கரில் 85 வயது முதியவரை வைத்து பூட்டி சென்ற வங்கி அதிகாரிகள்.. முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்.!

Summary:

லாக்கரில் 85 வயது முதியவரை வைத்து பூட்டி சென்ற வங்கி அதிகாரிகள்.. முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்.!

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ண ரெட்டி (வயது 85). இவர் அதே பகுதியில் உள்ள யூனியன் வங்கிக்கிளையின் லாக்கருக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் லாக்கரில் இருப்பதை கவனிக்காத ஊழியர் அதனை பூட்டியுள்ளார். 

இதனால் முதியவர் வங்கி லாக்கரில் சிக்கி கொண்ட நிலையில், இரவில் முதியவர் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள், வங்கியில் உள்ள ரகசிய கேமிரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். 

அப்போது, கிருஷ்ணா ரெட்டி லாக்கரில் இருப்பது உறுதியாகவே, லாக்கரை திறந்து முதியவரை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால், மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். ஊழியரின் லட்சியத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். 


Advertisement