உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை; விசாரணையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை; விசாரணையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!


Telangana Hyderabad 2 Baby Killed parents Suicide

 

தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை ஒட்டுமொத்தமாக குழந்தைகளின் சிகிச்சைக்கு செலவழித்த தம்பதி இறுதியில் தற்கொலை செய்துகொண்டனர். குழந்தைகளையும் தனியே விட மனமின்றி அவர்களையும் கொலை செய்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மென்பொருள் பொறியாளர் சதீஷ் (வயது 39). இவரின் மனைவி வேதா (வயது 35). தம்பதிகளுக்கு நிஷிகட் என்ற ஒன்பது வயது மகனும், நிகால் என்ற ஐந்து வயது மகனும் இருக்கின்றனர். பிறந்தது முதல் இரு மகன்களுக்கும் உடல்நிலை தொடர்பான பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன. இதற்காக பல ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை.

சிகிச்சைக்காக தம்பதிகள் தாங்கள் சம்பாதித்த மொத்த பணம் மற்றும் நண்பர்களிடம் வாங்கிய கடன் என அனைத்தையும் செலவு செய்து இருக்கின்றனர். தொடர்ந்து குழந்தைகளின் உடல்நலம் மோசமாகிக் கொண்டே சென்றதால், மன வேதனை அடைந்த தம்பதி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தனர். 

Hyderabad

பின்னர் அவர்களும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விசயம் தொடர்பான தகவல் அறிந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது நால்வரும் சடலமாக இருந்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நால்வரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.