டேபிள் ஃபேனை போட்ட மனைவிக்கு நடந்த விபரீதம்! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவரும் உயிரிழப்பு..! கதறும் குடும்பத்தினர்...!!!



telangana-electric-shock-couple-dies

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் டேபிள் ஃபேனை இயக்கியபோது மின்சாரம் தாக்கி வயதான பெண் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவருக்கும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

டேபிள் ஃபேனை இயக்கியபோது நேர்ந்த விபரீதம்

நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி சோபியா பேகம் (60). இருவரும் வீட்டில் இருந்த நிலையில், சோபியா பேகம் டேபிள் ஃபேனை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஃபேனில் மின்கசிவு ஏற்பட்டு, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கண்ணெதிரே கருகிய பருத்திப் பயிர்! கடன் சுமையால் உண்டான மன உளைச்சல்... வயலிலே பருத்தியோடு தன் உயிரையும் மாய்த்த விவசாயி! நெஞ்சை உலுக்கும் சோகம்....!!!

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவருக்கும் மின்சாரம்

மின்சாரம் தாக்கியதால் சோபியா பேகம் கீழே விழுந்து துடித்துள்ளார். இதைப் பார்த்த தாவூத் மியா பதறியபடி மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் சோபியா பேகத்தைத் தொட்டபோது, அவருக்கும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் இருவரும் அடுத்தடுத்து மின்சார தாக்குதலுக்கு உள்ளாகினர்.

போலீசார் விசாரணை

மின்சார தாக்குதல் காரணமாக கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு தேவருகொண்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மின்கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே வீட்டில் கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது அஞ்சையா காலனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களில் ஏற்படும் மின்கசிவுகளை உடனடியாக சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது.

 

இதையும் படிங்க: என்னா ஒரு ஸ்பீடு... காரும் - மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் கோர விபத்து! 4 பேர் துடிதுடித்து பலியான சோகம்... பகீர் வீடியோ...!!!