யூடியூப் கேமிங் சேனல் கைகொடுக்காததால் டாப் லிஸ்ட் மாணவன் தற்கொலை.. வரவேற்பின்மையால் விபரீதம்..!

யூடியூப் கேமிங் சேனல் கைகொடுக்காததால் டாப் லிஸ்ட் மாணவன் தற்கொலை.. வரவேற்பின்மையால் விபரீதம்..!



telangana-college-student-suicide-youtube

படிப்பில் சிறந்த மாணவராக இருப்பவர் யூடியூப் கேமிங் சேனலில் ஆதிக்கம் செலுத்த இயலாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத், சைராபாத் பகுதியில் வசித்து வருபவர் தீனா (வயது 23). இவர் தனது பெற்றோருடன் அபார்ட்மெண்டில் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், குவாலியரில் இருக்கும் ஐ.ஐ.டி.எம் நிறுவனத்தில் மூன்றாம் வருடம் பயின்று வந்துள்ளார். 

படிப்பில் படுசுட்டியாக இருக்கும் தீனா, திறமையான முயற்சியால் யூ டியூப் செயலையும் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த சேனலில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விடியோவை பதிவு செய்துள்ளார். இவரின் சேனலுக்கு தீனா எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு இல்லை. 

இதனால் விரக்தியடைந்த தீனா, நேற்று மதியம் வீட்டின் 5 ஆவது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். மாடியில் இருந்து கீழே விழுந்தவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஹைதராபாத் காவல் துறையினர், தீணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.