நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து! சென்னையில் பரபரப்பு!
அதிகாலை 4 மணிக்கு எழுந்து கஷ்டப்பட்டு இப்படி நடக்குது.... இனி இங்க இருக்கவே மாட்டேன்! பெண் ஆசிரியருக்கு பள்ளியில் நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி வீடியோ..!!!
கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய இந்த சம்பவம், பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
கண்ணீருடன் வெளியான குற்றச்சாட்டு
பள்ளிக்குச் செல்லும் போது பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், நீண்ட காலமாக பள்ளியில் தாம் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், பாலின பாகுப்பாட்டின் காரணமாக அவதிப்படுவதாகவும் அந்த ஆசிரியை குற்றம் சாட்டியுள்ளார். வேலை இழக்கும் பயத்தில் அமைதியாக இருப்பது தவறு செய்பவர்களுக்கே சாதகமாகிவிடும் என அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ராஜினாமா முடிவு
“இன்று நான் எனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கப் போகிறேன்” என ஆவேசத்துடன் கூறிய அவரது வார்த்தைகள் பார்ப்பவர்களின் மனதை நெகிழச் செய்தன. பள்ளி நிர்வாகம் தமது உடை மற்றும் தோற்றத்தைப் பற்றி தரக்குறைவாக பேசியதாகவும், அவமானப்படுத்தியதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் அமர்ந்து இப்படியா செய்வது! பரபரப்பான சாலையின் நடுவே முதியவர் செய்த செயலை பாருங்க.... வைரலாகும் வீடியோ!
அதிகாலை தொடங்கும் போராட்டம்
அதிகாலை 4 மணிக்கே எழுந்து, பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து, இருக்கை கூட இல்லாமல் நின்றபடி பள்ளிக்கு வருவதாக அவர் கூறினார். ஆனால் பள்ளியில் தமக்கு கிடைப்பது மரியாதை அல்ல, அவமானங்கள் மட்டுமே என தனது வேதனையை வெளிப்படுத்தினார். இது பல ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் Mental Harassment நிலையை பிரதிபலிப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் ஆதரவு
@lifeofswa என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வைரல் வீடியோவை வை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். “பல கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் இதே போன்ற மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்” என பலரும் தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு ஆசிரியின் கண்ணீரில் வெளிப்பட்ட இந்த உண்மை, கல்வி நிறுவனங்களில் பணியிட மரியாதை மற்றும் சமத்துவம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆசிரியர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: கண் தெரியாத முதியவர் பேருந்தில் செய்த வேலையை பாருங்க! இந்த மனசு யாருக்கு வரும்.... வைரலாகும வீடியோ..!!