ஆன்லைன் டெலிவரியில் இப்படி ஒரு ரூட்டா... வியக்கவைக்கும் ஸ்விக்கி ஊழியரின் செயல்..!

ஆன்லைன் டெலிவரியில் இப்படி ஒரு ரூட்டா... வியக்கவைக்கும் ஸ்விக்கி ஊழியரின் செயல்..!


swiggy delivery man viral video

ஹெவி டிராபிக்கில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் குதிரையில் ஜம்முனு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் கலவையான கமெண்டுகளை பெற்று வருகிறது. 

நாட்டின் பல பகுதிகளிலும் மழைக்காலங்களில் டிராபிக்ஜாம் நிறைந்து காணப்படும். இதற்கு நடுவில் வேலைக்கு செல்லும் மக்கள் சிக்கிக் கொண்டு வெளியே செல்வதற்குள் ஒரு வழியாக வேண்டியிருக்கும். வேலைக்கு செல்லும் மக்களுக்கே இந்த கதி என்றால் மழை நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் நிலையை வார்த்தையால் சொல்ல இயலாது.

டிராபிக் மழை என அனைத்தையும் சமாளித்து டெலிவரி செய்தாலும் சில கஷ்டமர்கள் அவர்களை திட்டுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இருப்பினும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் மீண்டும் உணவு டெலிவரி ஊழியர்கள் அந்த வேலையை விரும்பி செய்கின்றனர். தற்போது அதுபோன்ற ஒரு ஊழியரின் செயலை பற்றிய வீடியோ வைரலாகியுள்ளது. 

மும்பையில் ஐந்து நொடிகளில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஹெவி ட்ராபிக்கில் குதிரையில் செல்வது போன்று இடம்பெற்று இருக்கிறது. just mubai things என்று கேப்ஷனுடன் எழுதப்பட்டிருந்த இந்த வீடியோ, just a vibe என்று யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க சிறப்பான ஐடியாவாகத்தான் இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.