இந்தியா

தூக்க முடியாமல் நண்பர்கள் கொண்டு வந்த கிஃப்ட்! மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ.!

Summary:

தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு நண்பர்கள் கொண்டு வந்த கிஃப்ட்! வாங்கிய மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வைரலாகும் வீடியோ!!

நிகழ்ச்சி ஒன்றில் மணமகனின் நண்பர்கள் தூக்கமுடியாமல் கொண்டு வந்து கொடுத்த பரிசுப் பொருளைக் கண்டு மணமக்கள் மற்றும் அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்காலத்தில் திருமண நிகழ்வுகள் என்பது திருவிழாக்களை போல மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அத்தகைய விழா மறக்கமுடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் நண்பர்களும் மணமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பலவிதமான பரிசுகளை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருமண வரவேற்பு விழா ஒன்றில் மணமகனின் நண்பர்கள் மணமக்கள் மற்றும் அங்கிருந்த அனைவரும் வியக்கும் வகையில் பெரிய பிரம்மாண்டமான கிப்ட்டை தூக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு வந்துள்ளனர். அது என்னவாக இருக்கும் என பலருக்கும் எதிர்பார்ப்பு கிளம்பியது. மேலும் அது வாஷிங் மெஷினாக இருக்கலாம் எனவும் மணமக்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் அந்த பரிசு பெட்டியை பெற்றுக் கொண்ட பின்பு தான் அது வெறும் பெட்டி, அதன் உள்ளே எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. அதனைக் கண்டு மணமக்கள் மற்றும் அவர்களை சுற்றியிருந்தவர்கள் வயிறு குலுங்க சிரித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் பரவி வருகிறது.


Advertisement