நிலாவாக மாறிய மரம்! சூரிய கிரகணத்தால் நடந்த ஆச்சரியம்! வைரல் வீடியோ!



suriya-krakanam-2019

சூரிய கிரகணம் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றி நடைபெற்றுவருகிறது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலா வரும்போது, நிலவின் நிழல் சூரியனை மறைகிறது. இதனையே சூரிய கிரகணம் என்கிறோம்.

60 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற முழு சூரிய கிரகணம் ஏற்படும். தமிழகத்தில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக பல்வேறு இடங்களில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மக்கள் பலரும் சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில், கடலூர் பெரியார் கல்லூரி முன்பு உள்ள ஆலமரத்தின் மேல்பட்ட கிரகண ஒளியால் தரை முழுவதும் நிலா வடிவத்தில் மரத்தின் நிழல் பிரதிபலித்தது. இந்த காட்சி காண்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.