த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
விஜய்யின் GOAT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான GOAT திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
மேலும், இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரேம்ஜி, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். மேலும், அனைத்து ரசிகர்களை கவரும் வகையில் அஜித்தின் மங்காத்தா மியூசிக் மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் என்ட்ரி என பல சுவாரசியமான ட்விஸ்ட்களை வைத்து படக்குழுவினர் கவர்ந்திருந்தனர்.
இதையும் படிங்க: விஜயின் கோட் படத்தை பார்க்க, 'ஆடு'டன் வந்து அலப்பறை செய்த கூல் சுரேஷ்; ரசிகர்கள் உற்சாகம்.!
சர்ச்சையான த்ரிஷா புடவை
இந்த படத்தில் இடம்பெற்ற 'மட்ட' என தொடங்கும் பாடலுக்கு விஜயுடன், த்ரிஷா ஆடியிருந்தார். இந்த பாடல் கில்லி படத்தில் இடம்பெற்ற 'அப்படி போடு' பாடல் போலவே நடனம் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் காரணமாக ரசிகர்கள் பலருக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்திருந்தது. இதில், திரிஷா விஜய்யின் கட்சிக்கொடி கலரில் புடவை கட்டியிருந்ததாக பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.
தயாரிப்பாளர் ராஜன் சரமாரி கேள்வி
இந்த நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் GOAT திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். த்ரிஷா என்ன விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரா? அதனால் தான் அவர் விஜயின் கட்சி கொடி நிறத்தில் புடவை அணிந்து நடனமாடினாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கோட் திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் காந்தி என வைக்கப்பட்டிருந்தது. அதற்கு, காந்தி பெயரை வைத்துக் கொள்ளும் அளவுக்கு விஜய் என்ன ஒழுக்கமானவரா? எனவும் காந்தியின் ஒழுக்க நெறிகளை கடை பிடித்தவரா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இவருடைய விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்கள் பலரும் பதில் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோட் திரைப்படத்தை பார்க்க வந்த சிவகார்த்திகேயன்; வைப் ஆகும் ரசிகர்கள்.!