சொத்து தகராறு... அண்ணனின் ஆணுறுப்பை அட்டாக் செய்த தம்பி.!! வினோத சம்பவம்.!!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட தகராறில் தம்பி, அண்ணனின் ஆணுறுப்பை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து தகராறு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சொரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகுமார் மற்றும் கார்த்திக். அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவர் இடையே வீடு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக தகராறு இருந்து வந்திருக்கிறது.
அண்ணனின் ஆணுறுப்பில் தாக்குதல்
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பாலகுமார் மற்றும் கார்த்திக் இடையே வீடு தொடர்பாக மீண்டும் பிரச்சனை வெடித்திருக்கிறது. அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் தம்பி கார்த்திக் அண்ணன் பாலகுமாரின் ஆணுறுப்பில் பலமாக தாக்கி இருக்கிறார். இந்த தாக்குதலில் பாலகுமார் வலி தாங்க முடியாமல் துடித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பயங்கரம்... இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.!! 5 நபர்களுக்கு வலைவீச்சு.!!
காவல்துறை விசாரணை
இதனைத் தொடர்ந்து பாலகுமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கே பாலகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... துண்டு துண்டாக வெட்டி பாலியல் தொழிலாளி படுகொலை.!! அதிர்ச்சி வாக்குமூலம்.!!