அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
ஆதிக்கம் செலுத்தும் நடிகை
தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து இந்தியாவிலேயே அதிக சம்பளத்தை வாங்கக்கூடிய நடிகையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். சினிமாவில் கால் தடம் பதித்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் பல படங்களில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார்.
சரிந்த மார்க்கெட்
ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழைந்து நன்றாக வளர்ச்சி அடைந்த பின்னர் ஒரு கட்டத்தில் இவரது மார்க்கெட் சரிந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ரீ எண்ட்ரீ கொடுத்தார் நயன்தாரா. அவரது மிரட்டலான வருகையால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னணி ஹீரோக்களுடன் அவரை நடிக்க வைத்தனர்.
இதையும் படிங்க: மிரட்டும் வில்லனாக சூர்யா.?! ரசிகர்களுக்கு மெர்சலான தகவல்.!
திருமண வாழ்க்கை
இப்படிப்பட்ட புகழ்களுக்கு எல்லாம் ஆளானவர்தான் நடிகை நயன்தாரா. இவர் தன்னுடன் 2015 இல் பணியாற்றிய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளையும் பெற்று வளர்த்து வருகின்றார். இறுதியாக நயன்தாராவின் நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக நயன்தாரா நடிக்கும் படங்களுக்கு எல்லாம் அவர் சம்பளமாக 10 கோடி வசூலிப்பதாக கூறப்படுகிறது.
அதிக சம்பளம்
சமீபத்திய செய்தி என்னவென்றால், நடிகை நயன்தாரா டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க 50 வினாடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஒரு படத்திற்கே நடிகைகள் இவ்வளவு சம்பளம் வாங்காத நிலையில் நயன்தாராவின் இந்த சம்பள விவரம் மற்ற நடிகைகளை ஆச்சரியத்திலும் பொறாமையிலும் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: கமலால் நடிகை ராதிகாவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. அவரே ஓபனாக சொன்ன தகவல்.!