மிரட்டும் வில்லனாக சூர்யா.?! ரசிகர்களுக்கு மெர்சலான தகவல்.!
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. தற்போது இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்து இருக்கின்றன.
கங்குவா ரிலீஸ்
நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் சூர்யா. அடுத்தடுத்து படங்களில் அவர் நடித்து தற்போது வரை ஹீரோவாக தனது பெயரை நிலைநாட்டியுள்ளார். அடுத்ததாக இவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கமலால் நடிகை ராதிகாவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. அவரே ஓபனாக சொன்ன தகவல்.!
தேதி மாற்றம்
ரஜினியின் வேட்டையன் திரைப்படமும், அதே நாளில் வெளியாக இருப்பதால் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது. இதன் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44 வது படத்திலும் நடித்து வருகின்றார். இத்தகைய நிலையில், தூம் திரைப்படத்தின் 4வது பாகத்தில் சூர்யா நடித்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
வில்லனாக சூர்யா
இந்த தூம் 4 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழில் ஜான்வி கபூர் சொன்ன ஒரு வார்த்தை.! தீவிரமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்.!