ரசிகர்மன்ற பொதுச்செயலாளருக்கு பிறந்த குழந்தை; பெயர் சூட்டி மகிழ்ந்த விஜய் சேதுபதி.!
தமிழ்த்திரை உலகில் மிக நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் நடிகராக அந்தஸ்து பெற்றவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் வெளியான சேதுபதி, விக்ரம் வேதா, நானும் ரவுடிதான் உட்பட பல்வேறு படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத்தொடர்ந்து, முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்த விஜய் சேதுபதி, இன்று மக்கள் செல்வனாகவும் இருக்கிறார். எந்த இயக்குனர் புதிதாக படத்தில் நடிக்க கோரிக்கை வைத்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு நடித்துக் கொடுக்கும் பக்குவதையும் அவர் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு... பிக் பாஸ்-க்கு அட்வைஸ் கொடுக்கும் பொதுஜனம்.. ப்ரோமோ வீடியோ இதோ.!
கனியன் என பெயர் வைப்பு
தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்கள் இவருக்கு அட்டகாசமாக பொருந்தியதை தொடர்ந்து, நடிகர் ரஜினியுடன் பேட்ட, விஜயுடன் இணைந்து மாஸ்டர், கமலுடன் விக்ரம் ஆகிய படங்களில் நடித்து பெருவாரியான வரவேற்பையும் பெற்றார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் குமரன் என்பவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு கனியன் என்ற பெயர் சூட்டி விஜய் சேதுபதி மகிழ்ந்தார்.
இதையும் படிங்க: ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு... பிக் பாஸ்-க்கு அட்வைஸ் கொடுக்கும் பொதுஜனம்.. ப்ரோமோ வீடியோ இதோ.!