மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த புதிய திட்டம்.! இந்திய அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரயிலை தீ வைத்து கொளுத்திய மக்கள்.!



Strengthening opposition to the Agnibad project

இராணுவம்,  கடற்படை,  விமானப்படை ஆகிய முப்படைகளிலும்  தற்காலிக ஆட்சேர்ப்புக்கான  ‘அக்னிபாத்’ எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவர்.

இவர்களுக்கு மாத ஊதியம் மற்றும் 4 ஆண்டுகள் நிறைவடைந்ததும், சேவா நிதி என்கிற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். ஆனால்  இவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் 3 வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

பீகாரில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பீகாரில் போராட்டத்தில் இறங்கிய இளைஞர்கள், காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், போராட்டத்தின் உச்சமாக ரயிலை தீ வைத்து கொழுத்தியுள்ளனர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறி பீகாரில் பதற்றம் நிலவுகிறது.