உலகம் லைப் ஸ்டைல்

தினமும் இரவு ஹோட்டலில் மட்டுமே சாப்பிடும் நாய்..! பல மில்லியன் பேர் பார்த்த வீடியோ காட்சி..!

Summary:

Stray dog eating hotel at every night Subway sally

அமெரிக்காவில் உள்ள நாய் ஓன்று கடந்த ஒன்றரை வருடங்களாக தினமும் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிடும் சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது. நியூ மெக்சிகோவை சேர்ந்த அந்த நாயானது அந்த பகுதியில் உள்ள சாண்ட்வெட்ச் உணவகம் ஒன்றுக்கு தினமும் செல்கிறது.

ஹோட்டலுக்கு வெளியே அமர்ந்து, கடைக்காரர் முகத்தை பவ்யமாக பார்க்கிறது. அந்த கடைக்காரரும் அந்த நாய்க்கு உணவு கொடுக்கிறார். இந்த வழக்கம் கடந்த ஒன்றரை வருடங்களாக தினமும் நடந்துவருவதாக அந்த கடைக்காரர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நாய்க்கு சப்வே சாலி(Subway Sally) என செல்ல பெயர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நாய் கடைக்கு வந்து உணவுக்காக அமர்ந்திருப்பது, இவர் உணவு பரிமாறுவதை அந்த நாய் வாங்கி உண்பது போன்ற காட்சிகள் வீடியோவாக பதிவாகி இணையத்தில் பதிவிட அந்த விடீயோவை இதுவரை 5.75 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.


Advertisement