இந்தியா

இனி தமிழில் பேசக் கூடாது; ஆங்கிலம், இந்தியில் தான் பேச வேண்டும்; தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு.!

Summary:

southern railway new announcement - no tamil language

மத்திய அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் துறைகளில் முக்கியமான ஒரு துறை ரயில்வே ஆகும். இந்த நிலையில் இனி தமிழில் பேசக்கூடாது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மதுரை அருகே ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில் நிலைய மேலாளர் இடையிலான தகவல் பரிமாற்றத்தில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டதாம். ஆனால் ஓட்டுநருக்கு தமிழ் தெரியாத காரணத்தால், பெரும் விபத்து நேரிட இருந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் எப்படியோ தவிர்க்கப்பட்டு விட்டதாம்.

இந்நிலையில், தெற்கு ரயில்வே பரபரப்பான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது,  ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அலுவலர், ஸ்டேஷன் மாஸ்டர் இடையே உள்ள அலுவலக தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்க வேண்டும். 

பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ரயில் நிலைய மேலாளர்கள் இடையே சரியான புரிதல் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement